2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் மன்னார் வளாகம் திறப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யாழ். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் மன்னார் பயிற்சி வளாகம், இன்று மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. நீண்ட காலமாக வன்னி மாவட்ட ஆசிரிய பயிற்சியாளர்கள் தங்களது பயிற்சிகளுக்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

அது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பயிற்சி நிலையத்தை மன்னாரில் திறப்பதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.

தமிழ் மற்றும் சமூகக்கல்வி ஆகிய பாடங்களுக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இங்கு வழங்கப்படவுள்ளன. இதுவரையில் 65 ஆசிரிய மாணவர்கள் இங்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கைத்தொழில், வணிகத்துறை அமைச்ர் றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த பயிற்சி கலாசாலையைத் திறந்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .