2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தென்பகுதியிலிருந்து சர்வமதத் தலைவர்கள் குழு மன்னாருக்கு விஜயம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்ட சர்வமத நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை  மன்னார் சமூகத் தொடர்பு அருட்பனி மையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு தென் பகுதியில் இருந்து  சர்வ மதத்தலைவர்கள்,   தென் பகுதி மக்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் மன்னாருக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து காலந்தாலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்த்து குறித்த குழுவினர் தலைமன்னார் மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் வறிய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் சீ.தயாளராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, மாவட்ட உதவி செயலாளர், மன்னார் மாவட்ட சர்வமதத் தலைலர்களும்; கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக 2007,ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுகளில்  இடம் பெற்ற கடைசி போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் கஷ்டமாக உள்ளதாக  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'எத்தனையோ குடும்பப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 

போரின் போது எத்தனையோ உழைப்பாளிகள், குடும்பத்தலைவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். மக்களுடைய குடும்பத்தலைவர்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  குடியமர்ந்து பின் மீண்டும் இடம் பெயர்ந்து செல்கின்ற போது காணாமல் போகின்றவர்கள் மற்றும்   கொலை செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றமையினை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

குடும்பத்தலைவனை இழந்த குடும்பங்கள் தாயினுடைய தலைமையில் மட்டும் தான்  வாழ்ந்து வருகின்றனர்.
அதிகமாக ஆண்கள் யுத்தத்தினால் கொல்லப்பட்டள்ளனர்.    கணவன் கொல்லப்பட்டமையினால் பெண்களுக்கு உழைத்துக்கொடுப்பதற்கு எவருமே இல்லை.

ஆகவே இப்படி யுத்தத்தின் போது  பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன? இப்படி பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட குடும்பங்கள் எத்தனை உள்ளனர்? இவர்கள் யார் யார்? என்ன நிலைமையில் அவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள் என்பதனை தரவுகளை எடுக்க வேண்டும்.

18 வயதிற்கு குறைந்த குழந்தைகள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதனை தரவெடுக்க வேண்டும்.

அனாதைகளாக்கப்பட்டுள்ள  பிள்ளைகள், குழந்தைகள் எந்த உதவியும் இன்றி வீடுகளில் உள்ளனர். தாயும் தகப்பனும் இல்லாத குடும்பங்கள்  அதிகம் உள்ளனர்.ஆகவே அந்த பிள்ளைகளை எங்களிடம் பொறுப்பு கொடுக்கின்ற போது நாங்கள் அந்த பிள்ளைகளை ஏற்றுக்கொள்ளுகின்றோம்.

 அதிகமாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. வீடு இல்ல. படிப்பதற்கு வசதி இல்லை. தகப்பன் இல்லாததினால் பாதுகாப்பு குறைவு. ஆகவே இந்த பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ தெரியாது.

இதானல் தாய் எத்தனையோ பேர் தங்களின் பிள்ளைகளை எங்களிடம் கொண்டு வந்து தருகின்றார்கள்.நாங்கள் இவர்களை ஒரு நாளும் வர வேண்டாம் என்று செல்லவில்லை.

அவர்களை ஏற்று பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களை அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கின்றோம்.அதிகமாக வருபவர்கள் பெண் பிள்ளைகள் தான்.

அவர்களை நாம் ஏற்று மனிதத்தன்னையான முறையில் உறுவாக்குகின்றோம். சமூகத்தில் உள்ள நல்ல பிள்ளைகளாக வர உருவாக்கப்படுகின்றார்கள்.

இவர்களை சிறப்பான பாடசாலைகளில் சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகின்றது.கடைசி போர்ச்சூழலில் அவர்கள் கல்வியை இழந்தவர்கள். நலன் புரி நிலையங்களில் இருந்து படிக்க முடியாத நிலையில் இருந்தவர்கள்.

கத்தோலிக்க அமைப்புகளிடம் மட்டுமல்ல.  இந்து மறையைச் சார்ந்தவர்களும் இப்படி பாதிக்கப்பட்ட பிள்ளைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இப்படியாக பாதீக்கப்பட்ட பிள்ளைகளை நாங்கள் வைத்து பராமரித்து வருகின்ற போது சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் வந்து எங்களை பெரும் பாடு படுத்துகின்றனர்.

பல சிறுவர் இல்லங்களை  அதிகாரிகள் , "தகுதி அற்ற இடம்". "இது இங்கே இருக்கக்கூடாது" என்ற பல்வேறு காரணங்களைக்கூறி அந்த இல்லங்களில் உள்ளவர்களை வீட்டில் விடச் சொல்கின்றார்கள்.இல்லங்களை மூடுகின்றார்கள்.

 கை, கால்களை இழந்தவர்களை தூக்கி விடுவதற்கான முயற்சிகள் எதுவும் இடம் பெறுகின்றாதா என்ற கேல்வி கேட்டால் பதில் கேள்விக்குறியாக உள்ளது' என்றார்.


   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X