2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை'

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டம், வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளை சிறுவர் தொடர்பாக மேற்கொள்வதற்கும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் த.செல்வகுமார், 'வவுனியா மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் அதிகரித்து செல்கின்றன.

அவை அனைத்தும் இரு தரப்பினரது சுமூக நிலை ஏற்பாட்டின் பிரகாரம் நீதியின் முன் செல்லாமல் தீர்க்கப்படுவதன் காரணமாக துஸ்பிரயோகங்கள் அதிகரித்து செல்வதற்கான வாய்ப்பபுகள் உள்ளன.

எனவே துஸ்பரயோகத்தில் ஈடுபடும் தரப்பினரை பக்கச் சார்பின்றி நீதியின் முன் நிறுத்துவதுடன் தண்;டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை மெனிக்பாம் வலயம் பூச்சியம் மற்றும் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்து செல்வதாகவும் தெரிவித்தமையினால் இவ்வடயம் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்க அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் பாதிப்படைந்த பிள்ளைகளை பெற்றோருடன் மீள் இணைப்பு செய்யும் வரை பராமரிப்பதற்கான தற்காலிக சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அத்துடன், வவுனியா நகர பாடசாலைகளில் அதிகரித்து வரும் மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கௌ;ளப்பட வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர், தொழில் திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள் உட்பட சமூகசேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X