2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சியில் புதிய உரக்களஞ்சியம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சீரான உர விநியோகத்தைச் செய்வதற்காக புதிய உரக்களஞ்சியம் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரகுமாரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கு மீள்நிர்மாணத் திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் கமநல சேவைகள் திணைக்களத்தினால் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் இந்த உரக்களஞ்சியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விவசாயிகள் உரிய நேரத்தில் தங்களுக்குத் தேவையான உரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்ததைக் கவனத்திற்கொண்டே இந்த உரக்களஞ்சியத்தை அமைத்ததாக இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத் தலைவர்  சு.மனோகரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர்  மோகனபவன் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளெனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .