2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு விழிப்புணர்வு; பாதுகாப்பு அமைச்சின் துண்டுப் பிரசுரங்கள் வவுனியாவில் விநியோகம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதை அடுத்து சுகாதார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து துண்டுப்பிரசுரம் ஒன்றினை வவுனியாவில் வெளியிட்டுள்ளன. அத்துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'உங்கள் சுற்றுச் சூழலில் நுளம்புகள் பெருகுவதற்கான மற்றும் டெங்கு நோயினை பரப்ப கூடிய நுளம்புகள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என பரீட்சித்து பார்ப்பதற்காக எதிர்வரும் தினங்களில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழுவென்று விஜயம் செய்யவுள்ளன.

அப்பரிசோதனையில் தாம் சார்ந்த சூழலில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டால் இலங்கைச் சட்டத்தின் 262ஆம் பிரிவின் பிரகாரம் காவிகள் பரவுவதற்கு ஏதுவான ஓர் காரணியை சட்டவிரோதமாக அல்லது பொறுப்பற்ற விதத்தில் செயற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .