2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பிரதிநிதிகள் மன்னாரிற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

கடந்தகால யுத்தத்தின்போது பெற்றோர்களால் தவறவிடப்பட்ட சிறுவர்களை கண்டுபிடிக்கும் முகமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பிரதிநிதிகள்  மன்னார் மாவட்டத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மேற்படி அதிகாரிகள் மன்னார் மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி மைக்கல் கொலினின் உதவியுடன் மன்னாரில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களை பராமரித்து வரும் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ளவர்களுடனும் கலந்துரையாடினர்.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து  இறுதியில் நலன்புரிய நிலையங்களுக்கு மாற்றப்பட்டோம். இதன்போது எமது தந்தைமார்கள் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் பூசா முகாமிலுள்ளனர். இந்த நிலையிலேயே நாம் சிறுவர் இல்லங்களிலுள்ளோமென கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பிரதிநிதிகளிடம், சிறுவர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னராக  பூசா தடுப்பு முகாமிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் இந்த ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு உறுப்பினர்கள் மன்னாரிலுள்ள 5 சிறுவர் இல்லங்களுக்குச் சென்று விபரங்களை பதிவு செய்துள்ளதாகவும்  கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பிரதிநிதிகளான தசன் கர்சஜீத்,  டி.ஆர்.கெலி ஆகியோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X