2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ள நீரை வெளியேற்ற உதய புரம் கிராமத்தில் சிரமதானப்பனி

Kogilavani   / 2011 நவம்பர் 28 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார்; மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கடும் மழையினைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதீக்கப்பட்டுள்ள உதய புரம் கிராமத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் முகமாக இன்று திங்கட்கிழமை காலை மாபெரும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

மேற்படி கிராமத்தில் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது பெய்த கடும் மழையினால் 75 குடும்பங்கள் கடுமையாக பாதீக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய வீடுகளைச்சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் முகமாக மன்னார் பிரதேச சபையும் இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவும் இணைந்து மாபெரும் சிரமதானப்பணியினை மேற்கொண்டனர்.

இச்சிரமதான பணியில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் அந்தோனி சகாயம், இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு அதிகாரி மேஜர் விக்கும்புர, லெப்டினன் விஜித குமார, இராணுவ உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் பலரும் கொண்டதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .