2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மன்னார் மாவட்ட  மக்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளான மன்னார்,  மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கே தொழில்நுட்ப வசதியுடன் கூடிய விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நீர் இறைக்கும் இயந்திரங்கள்;, கிருமிநாசினி தெளிக்கும் உபகரணங்கள்;, பாரம் தூக்கும் வண்டிகள் ஆகியனவே இந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதலாம் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 
வர்த்தக முதலீட்டு  அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கமநல சேவைகள் திணைக்களத்தின் செயலாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்;, பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்காண பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் றீட்டா செயல்த் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .