2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தூய குடிநீர் திட்டத்திற்கு பாக். நிதியுதவி

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான தூய குடிநீர் திட்டம் இரண்டிற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. நீராவிப்பிட்டி கிழக்கு மற்றும் குமாரபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலூச், இந்த குடிநீர் திட்டங்களை பயனாளிகளிடம் கையளித்தார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் மோகனதாஸ், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட பொறுப்பாளர் ஏ.டப்ளியூ.எம்.பாஹிம் மற்றும் சமூக அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த இரண்டு கிராமங்களிலும் சுமார் 750க்கு மேற்பட்ட மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இதேவேளை, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தூய குடிநீர் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த வருட முற் பகுதியில் பாகிஸ்தான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .