2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் இராணுவ வேலைத்திட்டங்கள் குறித்து ஜெனரல் பிக்ரம் சிங் திருப்தி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


இலங்கை இராணுவத்தினரால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து தான் திருப்தியடைவதாகயும் இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இராணுவத்தின் 211 படைத்தளத்திற்கு வருகை தந்த ஜெனரல் சிங் உள்ளிட்ட குழுவினரை, வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றதுடன் அங்கு இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் படைத் தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமும் அளித்தார்.

இந்திய அரசின் வேலைத்திட்டங்கள், புகையிரதப்பாதை புனரமைப்பு, வீதிகள் புனரமைப்பு, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் மற்றும் மீள்குடியேறியோருக்கான செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நிலையத்துக்கான விஜயத்தினை மேற்கொண்ட ஜெனரல் பிக்ரம் சிங் குழுவினர், அங்கு புனர்வாழ்வில் ஈடுபட்டிருந்த முன்னாள் பெண் போராளிகளுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், 'வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து தான் திருப்தியடைவதாக' தெரிவித்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X