2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளத்தால் மன்னார் - வெளிமாவட்ட போக்குவரத்துக்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மல்வத்துஓயா தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள நிலையில், மன்னார் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன

மல்வத்துஓயா தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள நிலையில், மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் மடுச் சந்தியிலிருந்து தம்பனைக்குளம் பிரதான வீதியூடாக வெள்ளநீர் குறுக்காக பாய்ந்து செல்கின்றது. 

இதனால் மன்னாரிலிருந்து மதவாச்சி பிரதான வீதியூடான போக்குவரத்துக்களும் மன்னார் - வவுனியா, மன்னார் - மதவாச்சி போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

மன்னாரிலிருந்து மதவாச்சி மற்றும் வவுனியா நோக்கிச் சென்ற பஸ்கள் தம்பனைக்குளம் பிரதான சந்தியிலும் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி வந்த பஸ்கள் மடுச்சந்தியிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தம்பனைக்குளம் கிராமம் முற்றாக  வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த 350 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X