2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் பல வீதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் மன்னார், மதவச்சி பிரதான வீதியின் கட்டையடம்பன் மற்றும் தம்பனைக்குளம் பகுதிகளில் போக்குவரத்துக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் தம்பனைக்குளம் கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இக்கிராம மக்கள் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் ம.வி. பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முருங்கன் - பறையனாலன் குளம் வீதியிலும் தம்பனைக்குளம், கட்டையடம்பன் பகுதிகளிலுமுள்ள பிரான வீதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

வெள்ளநீர் படிப்படியாக அதிகரித்த நிலையில் மன்னார், மதவாச்சி பிரதான வீதிகளில் இரண்டு இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

தென்பகுதியிலிருந்து மன்னாருக்கு வரும் அரசாங்க, தனியார் போக்குவரத்துக்கள் மடு திருத்தளத்தினுடாக பருப்புக்கடந்தான் கிராம வீதியூடாக மன்னாரை சென்றடைகின்றது.

இதேவேளை, மன்னாரிலிருந்து தென்பகுதிக்குச் செல்லும் சகல போக்குவரத்துக்களும் உயிலங்குளம் வீதியூடாக பருப்புக்கடந்தான் வீதியை சென்றடைந்து அங்கிருந்து மடுத்திருத்தளத்தினூடாக செல்கின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .