2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது.

2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன.

இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • k.balendren Wednesday, 26 December 2012 08:04 AM

    இன்று தமிழர்களுக்கோ போராளிகளுக்கோ அல்ல அரசாங்கத்திற்கே புலி தேவைப்படுகிறது.

    Reply : 0       0

    Kumar Wednesday, 26 December 2012 03:12 PM

    ஒருவகை திருவிளையாடல் தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .