2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்குரிய வசதிகளை செய்துகொடுக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்து அச்சாங்குளம் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இம்மக்களின் தேவைகள் குறித்து கண்டறிவதற்காக அமைச்சர் ரிசாட் பதியுதீன், அவர்களின் பிரத்தியேக  செயலாளர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடியுள்ள நிலையிலேயே இம்மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்குமாறு பிரதேச செயலளாரிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பணிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வங்காலை பகுதியிலும் வெள்ளநிலை காணப்படுகின்றது. பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் சிறுவர்களே அதிகமுள்ளதாகவும்; இவர்களுக்கு பால்மாக்களே தேவைப்படுகின்றது. இருப்பினும் இவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் பால்மாக்களுக்கு தட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .