2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீள்குடியேற்றக் கிராமங்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமங்கள் அனைத்தையும் சமுர்த்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கியமையால், அக்கிராமங்களின்; அடிப்படைத் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என வவுனியா பிரதேச செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்றக் கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவரிடம் வினவியபோதே இவ்வாறு கூறினார்.

சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வாழ்வாதார செயற்பாடுகள் இக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், திவிநெகும திட்டம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற சங்கங்கள் ஊடாக அனைத்துக் கிராம அலுவலகர் பிரிவுகளிலும்  சுழற்சிமுறை வாழ்வாதாரக் கடன்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எமது பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் பிரச்சினைகளை இந்த வருடமே தீர்த்து வைக்க கூடியதாக இருக்கும் எனவும் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மின்சாரம் வழங்குவது தொடர்பிலும் நாம் பிராந்திய மின் பொறியியலாளருடன் கலந்துரையாடியுள்ளோம். இதற்கு இணங்க அவர்களும் தமது நடவடிக்கைகளை விரைவுபடுத்தி செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .