2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆடம்பரச் செலவுகளை குறைத்து விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்: சிவசக்தி எம்.பி.

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

ஆடம்பரச் செலவுகளை குறைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது 25 ஆயிரம் ரூபா இழப்பீட்டை ஓரிரு வாரங்களுக்குள் அரசாங்கம்  உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

'வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் நெற்செய்கை, உழுந்து உட்பட சிறுதானிய பயிர்ச் செய்கைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 25 ஆயிரம் ரூபா இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படுவதுடன் விவசாயிகள், வங்கிகளில் பெற்ற கடன்கள் அனைத்தையும் அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும்.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களே நெற்செய்கை, உழுந்து மற்றும் சிறுதானிய பயிர்ச் செய்கைகளில் கூடுதலாக ஈடுபட்டனர்.   இதற்காக வங்கிகள், உறவினர்கள், நண்பர்களிடம் அவர்கள் பெருந்தொகை கடன்களை பெற்றிருந்தனர். ஆனால் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து தற்போது வாழ வழியின்றியும் பெற்ற கடன்களை மீளக் கொடுக்க முடியாமலும் தவிர்க்கின்றனர்.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக முன்வந்து ஆடம்பரச் செலவுகளை குறைத்து ஒரு ஏக்கருக்கு ஆகக் குறைந்தது 25 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X