2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விவசாயிகளின் வங்கி கடன் தொடரபாக உரிய நடவடிக்கை எடுக்கவும்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'உணவுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் விவசாயிகளின் வங்கி கடன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் விவசாய கடன்களை பெற்ற விவசாயிகள் தமது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவர்களுக்கு எதிராக குறித்த வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவ கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த காலங்களில் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிகளில் விவசாய கடனை பெற்றுள்ளதோடு, வங்கிகளில் நகைகளை ஈடுவைத்து பணத்தை பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும் எதிர்பாராத விதத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உட்பட இயற்கை அனர்த்தங்களினால் வன்னி மாவட்ட விவசாயிகளின் பல ஏக்கர் விவசாய செய்கைகள் அழிவடைந்தன.

இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு மன உழைச்சலுக்கும் உள்ளாகினர்.
இயற்கை அனர்த்தம் 2011 மற்றும் 2012 ஆகிய காலங்கலிலேயே அதிகம் நிகழ்ந்தது.

இதனால் விவசாயிகள் குறித்த கடனை செலுத்த முடியாத நிலைக்கு உள்ளானார்கள்.

இது தொடர்பாக 20-09-2012 அன்று திகதியிடப்படப்ட கடிதம் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடனை செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
இதனால் விவசாயிகள் பாரிய மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே தற்போது உணவுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் குறித்த விவசாயிகளின் வங்கி கடன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்' என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .