2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிப்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யுத்தம் காரணமாக வடக்கில் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை பதிவுசெய்து அவற்றை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையொன்றை மன்னார் பிரஜைகள் குழு முன்னெடுத்து வருகின்றது. இக்குழுவானது, வடக்கின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் சென்று இத்தகவல்களைத் திரட்டி வருகின்றது.

1990ஆம் ஆண்டு முதல் இடைக்கிடையே இடம்பெற்ற யுத்தம் மற்றும் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பமான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது. இந்நடவடிக்கை நாளை 18ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது.

இதற்கமைய, 'கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும், 16ஆம் திகதி முல்லைத்தீவிலும் இந்த தகவல் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று 17ஆம் திகதி வவுனியாவிலும் நாளை மன்னாரிலும் முன்னெடுக்கப்படவுள்ளது' என்று மேற்படி மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதித் தலைவர் சகாயநாயகம் தெரிவித்தார்.

'யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை திரட்டியுள்ள தகவல்களுக்கும் தமது குழு திரட்டியுள்ள தகவல்களுக்கும் இடையில் பாரியளவில் வேறுபாடு காணப்படுகின்றது.

பிரஜைகள் குழு திரட்டிய தகவல்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு கொழும்பிலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்' என்று மன்னார் பிரஜைகள் குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X