2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜிம்பிறவுன் நகர் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகர சபைக்குட்பட்ட ஜிம்பிறவுன் நகர்(இருதய புரம்) கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரி மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை மன்னார் நகர சபையின் தலைவர்
எஸ்.ஞானப்பிரகாசத்திடம்; இன்று வெள்ளிக்கிழமை காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை குறித்த மகஐரை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் நகர சபைக்குட்;பட்ட ஜிம்பிறவுன் நகர் கிராமத்தில் 2007ஆம் ஆண்டு முன்னாள் மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டிமேல் மக்களுக்கு இக் காணிகளை வழங்கியுள்ளார்.

ஒரு நபருக்கு 15 முதல்; 20 வரையிலான பேச் நிலப்பரப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது இவ்விடத்தில் 100 குடும்பங்கள் வரை கடந்த 6 வருடகாலமாக மழை நீரிலும், வெள்ளத்திற்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.

அன்றில் இருந்து இன்று வரைக்கும் எவ்விதமான அடிப்படை வசதிகளை அரசாங்கமோ அல்லது பிரதேச செயலகமோ அல்லது நகரசபையோ மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.

இது தொடர்பாக பல்வேறுப்பட்ட கடிதங்களை உரிய தரப்பிற்கு வழங்கியும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியும் இன்று வரை எவ்விதமான சாதகமான  பதிலும் எமக்கு கிடக்கவில்லை .

இன்று இக் கிராமத்தில் 100 குடும்பங்கள் 500 ற்கும் மேற்பட்ட நபர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

150 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் 80 இற்கும் மேற்பட்ட பாலர் பாடசாலை மாணவ மாணவிகளும் எமது கிராமத்தில் இருந்து நடந்தும் சிலர் துவிச்சக்கர வண்டிகளிலும் இன்னும் பலர் ஒரு மாதத்திற்கு 1000 ரூபா பணம் செலவழித்தும் குறிப்பாக (பாலர் பாடசாலை பிள்ளைகள்)  பாடசாலைக்கு செல்லுகின்றார்கள்.

வருடா வருடம்  பெய்கின்ற மழைக்கு நாங்கள் இடம் பெயர்ந்து செல்லுகின்றோம் .

வீதிகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

எமது கிராமத்திற்கான வீதிகள் சரியான முறையில் செப்பனிட படுதல் வேண்டும். சரியான முறையில் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்.   மின்சாம் இல்லாமல் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

இக் குடும்பங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டிய நிலையில் கிராமத்தில் காணப்படும் 6 உள்ளக வீதிகளில் தற்போது 4 வீதிகளுக்கு மாத்திரம் தான் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே குறித்த கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையினரின் சார்பாக கேட்டுக் கொள்ளுகின்றோம்' என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .