2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'காட்டுகின்ற பாதையில் சென்று இலக்கினை அடையும் இளைஞர் சமூகம் எம்மிடம் உண்டு'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'சரியோ பிழையோ காட்டுகின்ற பாதையில் சென்று இலக்கினை அடையும் இளைஞர் சமூகம் எம்மிடம் உண்டு. எனவே எமது மக்களின் நல்வாழ்வுக்கு அவர்களை பயன்படுத்த ஒத்துழைப்புகள் தேவையாகவுள்ளது' என மனிதநேய பணியாளரும் பல்துறை வளவாளருமான வி. நவநீதன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மனப்பாங்கு விருத்தி செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இளைஞர்களுக்கு சரியான பதையை காட்டி அவர்களுக்கு சரியான இலக்கை காட்டி முறையான வழிகாட்டலை வழங்க நாம் தவறியிருக்கின்றோம். உண்மையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும் அதன் பின்னர் எமது மக்கள் தங்கி வாழும் சூழலுக்கு சென்றதும் அதன் காரணமாக எமது இளைஞர்கள் பொறுப்பற்றவர்களாக மாறியதுமே இளைஞர்கள் சமுக கட்டுமானத்திற்குள் வரத்தவறியதற்கு காரணமென கூறலாம்.

இன்று இலங்கை மத்திய வருமான நாடாக மாறியிருக்கின்றது. உலக நாடுகளின் உதவிகள் இல்லாமல் போகின்ற அல்லது குறைகின்ற நிலையில் இளைஞர்கள்தான் எமது எதிர்காலம். இளைஞர்கள் தமது சொந்தக்காலில் நின்று எமது பிரதேசத்தின் முழுமையான வளங்களை பயன்படுத்தி முன்னேற்றம் காண தம்மை அர்பணிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் இளைஞர்கள் அந்த பொறுப்பை எந்தளவு தூரம் எடுத்துகொண்டார்கள் என்பதை பார்த்தால் அது பெரிய கேள்வியாகவே உள்ளது.

சரியான முறையில் அவர்கள் பயன்படுத்தப்டுகின்றபோது நிச்சயமாக அவர்கள் சரியான மாற்றத்திற்கான காரணியாக இருப்பார்கள். எனவே எமது சமூக மாற்றத்திற்கான ஓர் ஊடகமாக இளைஞர்களை நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புக்களும் நிறுவனங்களும் உதவிகளை செய்ததன் வாயிலாக தங்கி வாழும் நிலைக்கு எமது மக்களும் இளைய சமூகமும் மாறியிருக்கின்றார்கள். இவ்வாறான உதவிகள் நிலைத்து நிற்க போவதில்லை. எனவே தமது சொந்த காலில் நிற்க வேண்டிய தேவையுள்ளது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .