2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செக்கட்டிப்புலவு கிராம அலுவலருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செக்கட்டிப்புலவு கிராம அலுவலருக்கு எதிராக சிவபுரம் மக்கள் புதன்கிழமை (26) காலை 10 மணியளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம அலுவலர் இலஞ்சம் கோருவதாகவும் பெண்களிடம் பாலியல் சேஷ்ட்டை புரிவதாகவும் கூறி அதற்கு எதிர்;ப்பு தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்பாட்டமானது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தாதியர் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.
'இந்தியன் வீட்டுத் திட்டம் வேண்டுமா?: ரூபாய் 50,000', 'சிறந்த சேவையை வழங்கும் கிராம அலுவலர்; எமது கிராமத்திற்கு வேண்டும்',  'சிறிகாந்தன் வேண்டாம், சிவபுரம் மக்களுக்கு நீதி வேண்டும்', 'பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்போம்', 'அரச அதிகாரி பாலியல் இலஞ்சம் கேட்பது சரியா' போன்ற சுலோக அட்டைகளை  ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பிரதேச செயலாளர் கா.உதயராசா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மேகநாதன் ஆகியோரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .