2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளார் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 27 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

கிளிநொச்சி சந்தையில் ஊடகவியலாளர் ஒருவர் புதன்கிழமை (26) தாக்கப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கடந்த வாரத்திலும் திருமுறுகண்டி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக சென்ற வேளை சில நபர்களினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (26) கிளிநொச்சி பொதுச்சந்தையில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர் மீது கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அவரின் புகைப்பட கருவியையும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .