2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வில்பத்து விவகார வழக்கு; நால்வருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி வில்பத்து சரணாலய பகுதியில் அத்துமீறிய குடியிறுப்புக்களை அமைத்துள்ளதாகக் கூறப்படும் நால்வரையும் தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டது.

வில்பத்து சரணாலய பகுதியில் அத்துமீறிய குடியிறுப்புக்களை அமைத்துள்ளதாகக் கூறி வன இலாகா திணைக்கள அதிகாரிகளினால் அக்கிராமத்தைச் சேர்ந்த 10பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த 10பேரில் நால்வர் மாத்திரமே நீதிமன்றில் ஆஜராகினர். ஏனைய அறுவரும் வெளிநாட்டில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, மறிச்சிக்கட்டி மக்களுக்கு எதிராக மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள், இம்மக்களை அக்கிராமத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X