2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் நாளை விசாரணை ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு நாளை சனிக்கிழமை (5) இடம்பெறவுள்ளது என்று ஆணைக்குழுவின் நிர்வாக உத்தியோகத்தர் கே.டபிள்யூ.பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தொடர்ந்து 6 ஆம் திகதிவரை இந்த விசாரணைகள் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் 7ஆம், 8ஆம் திகதிகளில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளன.

நாளொன்றுக்கு ஐம்பது பேர் என்ற வகையில் விசாரணை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன. இதன்படி தெரிவு செய்யப்பட்ட 240 பேரினது விசாரணை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.

ஏற்கெனவே இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன'   

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தமது உறவுகள் காணாமல் போனது பற்றி இதுவரை அறிவிக்காத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நான்கு தினங்களிலும் தமது புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஒழங்குகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழு உறுப்பினரான செல்லத்துரை பாஸ்கரன் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .