2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பழுதடைந்த மீன்கள் கைப்பற்றல்; வியாபாரிகள் விற்பனை புறக்கணிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள பழுதடைந்த மீன்கள் கரைச்சி பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகரால் புதன்கிழமை (29) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு மீன்களை கைப்பற்றி அவற்றை அழித்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

எனினும், பழுதடைந்த மீன்களுடன் சேர்த்து நல்ல மீன்களையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றி சென்றுள்ளதாக மீன் வியாபாரிகள் குற்றம் சுமத்தியதுடன், மீன் வியாபாரத்தை கைவிட்டு மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்களை பாதுகாப்பதற்குரிய வசதிகள் எதுவும் சந்தையில் இல்லாத நிலையில் தாங்கள் எவ்வாறு மீன்களை பாதுகாத்து விற்பனை செய்ய முடியும் என மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆர்.கிருஸ்ணகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, 'இது தொடர்பில் தன்னால் தற்போது எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்றும், சபையில் கலந்துரையாடிய பின்னரே கருத்துக்கூற முடியும்' எனவும் தெரிவித்தார்.

மேற்படி சந்தைக்கு முல்லைத்தீவு, பூநகரி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் மீன்களும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பிடிக்கப்பட்ட கரைவலை மீன்களும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .