2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இ.போ.ச. பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், ரஸீன் ரஸ்மின்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இருவேறு பஸ்களுக்கு  இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை (29) இரவு கல்வீச்சு தாக்குதல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் முல்லைத்தீவு தண்ணீறூற்று பகுதிகளில் வைத்து இத்தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வழியாக கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலி; பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனையடுத்து, பஸ்ஸை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பயணிகள் பிறிதொரு பஸ்ஸில்; ஏற்றி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கல்வீச்சுக்குள்ளான பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றுக்கும் புதன்கிழமை(29) இரவு தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு – கற்பிட்டி இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸிக்கே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியை இலக்கு வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பஸ்ஸிக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பஸ்ஸை செலுத்தி வரும்போது தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பஸ்ஸின் சாரதி முறைப்பாடு செய்துள்ளார்.

இப்பஸ்ஸானது, அண்மையில் முல்லைத்தீவு டிப்போவுக்கு அரசாங்;கத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .