2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

50 வீட்டுத்திட்ட வீடுகள் 5 வருடங்களுள் பாதிப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய், உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகள், கடந்த ஐந்து வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் உயிலங்குளம் கிராமத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட ஐம்பது வீட்டுத்திட்டத்தில் சில வீடுகளின் வீட்டுச்சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீட்டின் தளப்பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இக்குடியிருப்பில் உள்ள சில வீட்டின் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழும் நிலை காணப்படுகின்றது.

எனவே இவ்வாறு சேதமடைந்து காணப்படும் வீடுகளை புனரமைத்து தருமாறு அல்லது வேறு புதிய வீடுகளை வழங்குவதற்கோ உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சிறு குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்த வீடுகளில் ஆபத்துடனேயே வாழ வேண்டியிருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .