2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம், ரொமேஷ் மதுசங்)
'மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்த மக்களின் உணவு நிவாரணத்திற்காக 243 மில்லியன் ரூபாவும் வீடமைப்புக்காக 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்;பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை பாhவையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்களை தொடர்ச்சியாக தேவையான காலப்பகுதி வரை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

'சமைத்த உணவுகளை ஒருவாரத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் வெள்ளம் வடியாத பிரதேசங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .