2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

'அரணை' விவகாரம்: 50000 நட்டஈடு வழங்க உத்தரவு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                          (நவரத்தினம்)
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 'அரணை' என்று அழைக்கப்படும் விச ஜந்து அவிந்த நிலையில் காணப்பட்ட உணவு பொதியை உற்கொண்;டு பாதிப்படைந்த நபருக்கு 50,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகமொன்றில்; நேற்று வியாழக்கிழமை மதியம் உணவை உற்கொண்ட நபர் ஒருவர்  பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்;ந்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பாதிப்படைந்த நபருக்கு 50,000 ரூபா நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தண்டமாக 10000 ரூபா செலுத்த வேண்டுமெனவும் உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்திரவிட்டதுடன் இவ் உணவகம் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிந்துரைக்கமைய சீரமைக்கப்பட வேண்டும் எனவும் அதுவரை உணவகத்தை மூடுமாறும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிப்படைந்த நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .