2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

591வது படைப்பிரிவின் விளையாட்டுப்போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் 591வது இராணுவப் படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு சனிக்கிழமை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் முல்லைத்தீவு நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெஹத் டயஸ் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்களுக்கான சைக்கிலோட்டம், முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், கோலம் போடுதல், தலையனை அடித்தல், கயிறு இழுத்தல், சறுக்கு மரமேறுதல் உள்ளிட்ட பல பாரம்பறிய போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .