2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோம்பாவிலில் 67 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர் மக்களை குடியேற்றம் செய்வதற்காக கோம்பாவில் பகுதியில் முதற்கட்டமாக 100 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் 67 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள வீடுகளின் நிர்மாணப் பணிகளும் இந்த மாதம் 15ஆம் திகதியளவில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 100 வீடுகளுக்கான நிர்;மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலுள்ள முதல்த்தொகுதி மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்களெனவும் அவர் இன்று –தமிழ்மிரர் இணையளத்தளத்திற்கு கூறினார்.

கோம்பாவில் பகுதியில் உள்ளக வீதிகள், பொதுக்கிணறுகள், தற்காலிக வீடுகள் மற்றும் மலசலகூடங்களை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 1760 குடும்பங்கள் கோம்பாவில் பகுதியில் குடியேற்றம் செய்யப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 100 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன், பொக்கணை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே முதற்கட்டமாக குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .