2024 மார்ச் 28, வியாழக்கிழமை

க.பொ.த (சா/த) பரீட்சைக்கு வவுனியாவிலிருந்து 6,953 மாணவர்கள் தோற்றவுள்ளனர்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து 58 பரீட்சை நிலையங்களில்  6,953 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மற்றும் தனியார்  பரீட்சார்த்திகளுக்கு வவுனியா வடக்கு,  தெற்கு செட்டிகுளம் கல்வி வலயங்களில் 50 பரீட்சை மண்டபங்களும் 17 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் இணைப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து செட்டிகுளம் கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி நிவாரணக் கிராமத்திலிருந்து 338 மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ளனர். இவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளும் மதிய உணவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிரதேச மேலதிக கல்விப்பணிப்பாளர் பி.அரியரத்தினம் தெரிவித்தார்.

மேலும் காமினிவித்தியாலயத்திலும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாசாலையிலும் கல்வி கற்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து கல்விகற்கும் 368 மாணவர்களும் காமினி வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காமினி மகாவித்தியாலத்தில் மொத்தமாக 706 மாணவர்கள் பரீட்சை எழுத ஏழு பரீட்சை மண்டபங்கள் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்ததின்போது, படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களென சந்தேகிக்கப்படும் 133 ஆண்களும் 49 பெண்களும்; இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களுக்குரிய வகுப்புக்கள் மற்றும் கற்பித்தல்கள் செயல்பாடுகள் யாவும் புனர்வாழ்வு நிலையத்தில் முறையாக நடைபெற்றுள்ளது. தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்  இவர்களுக்கென ஒரு பரீட்சை மண்டபம் அமைக்கப்படுமெனவும் அரியரத்தினம் தெரிவித்தார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 23ஆம் திகதி நிறைவுபெறுகிறது.









 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X