2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நெதர்லாந்து மருத்துவர்களால் 75 பேருக்கு எலும்பு மாற்று சிகிச்சை

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

சேவை மனப்பான்மையுடன் நெதர்லாந்து நாட்டு  வைத்தியர்கள் வவுனியா அரசினர் வைத்தியசாலையில் ஆரம்பித்துள்ள எலும்பு மாற்று சிகிச்சை கூடத்தில் இதுவரை 75இற்கு மேற்பட்டவர்களுக்கு மாற்று எலும்புகள் வெற்றிகரமான முறையில் பொருத்தப்பட்டுள்ளது என மேற்படி வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் இந்த சத்திர சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த எப்ரல் மாதம் முதல் இந்த சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது.

வவுனியா அரசினர் வைத்தியசாலை ஊடாக வரும் நோயாளர்களுக்கே இங்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் தினங்களில் பிற்பகல் 1 மணிக்கு சிகிச்சைகள் நடைபெறுகின்றது. அத்துடன் கிளிநொச்சி,மன்னார், செட்டிகுளம் வைத்தியசாலைகளிலும் குறித்த நடமாடும் சேவைகளை நடத்தப்படுவதாகவும்  எனவும் மேற்படி வைத்தியர்கள் தெரிவித்தனர்.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .