2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாமில் முல்லைத்தீவு மக்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

மீள்குடியேறுவதற்காகப் பதிவு செய்தபின்னும்  தாம் கடந்த சில மாதங்களாக இடைத்தங்கல் முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக முல்லைதீவு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த இந்த மக்கள், மீள்குடியேற்றப்படவுள்ளதாகக் கூறி  அழைத்து வரப்பட்டிருந்தனர். எனினும் இவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற விருப்பம் தெரிவித்த பின்னும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் குடும்பங்கள் இவ்வாறு மீள்குடியேற்றப்படாமலிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசுவமடு, உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு வடக்கு, புதுக்குடியிருப்பு தெற்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே இன்னும் மீளக்குடியமர்த்தப்படாதுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வெகுவிரைவில் சொந்த இடங்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  முல்லைத்தீவு மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .