2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

"மன்னார் விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வசதிகளில்லை"

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொது விளையாட்டு மைதானம் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல வருடங்களாக இயங்கி வருவதாகவும் இதனால் குறித்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்காகச் செல்லும் வீரர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த விளையாட்டு மைதானமாக மன்னார் பொது விளையாட்டு மைதானம் இயங்கி வருகின்றது. இந்த மைதானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. குறிப்பாக குடிநீர் பிரச்சினை மற்றும் மலசலகூட பிரச்சினைகளுக்கு வீரர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். 

இந்த மைதானத்தில் இடம்பெறுகின்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்தும் ஏனைய கிராமங்களில் இருந்தும் வரும் விளையாட்டு வீர - வீரங்கனைகள், தங்களது அவசியத் தேவைகளை, விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்றே பூர்த்தி செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த மைதானத்துக்கு வரும் வீராங்கனைகள், தங்கது ஆடைகளை மாற்றுவதற்கான வசதிகள் கூட இன்றி பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மைதானத்தில் மறைவான இடங்களுக்குச் சென்று ஆடை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த மைதானத்திலுள்ள மிகவும் பழைமை வாய்ந்த நீர்த்தாங்கி ஒன்று, சேதமடைந்த நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அந்த நீர்த்தாங்கி உடைந்து அதிலிருந்து கற்கள் விழுவதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை தலைவரர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் கேட்ட போது, குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை மைதானத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .