2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அகக்கட்டுப்பாட்டை நீனைவூட்டும் கடிதத்தால் சர்ச்சை

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் கடமையாற்றுகின்ற சில பணியாளர்களுக்கு, மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளரால் கையொப்பமிட்டு கடந்த 4ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொது மக்களது போக்குவரத்து நலன் கருதி, நேரக்கணிப்பாளராக பணி செய்யும் தாங்கள் எம்முடன் உடன்படிக்கை செய்து கொண்ட அகக்கட்டுப்பாட்டை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டுகின்றோம்.

குறிப்பாக, கடமையை உரிய நேரத்திற்கு பொறுப்பெடுத்தல்,சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு தவறாது சந்தாப்பணம் அறவீட்டுத்துண்டு போட்டு கணக்கு முடித்தல், நாள் வரவு பதிவேட்டில் ஒப்பமிடுதல், புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறும், பொதுமக்களது போக்குவரத்துக்கு முதன்மை அலுவலராக பணி செய்யும் தாங்கள் முற்கோபம்,பொறுமையிழந்து பேசுதல் ஆகியவற்றை குறைத்து பணியில் ஈடுபடுமாறும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டும் குறித்த கடிதத்தில், 'புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறு என குறிப்பிடப்பட்டுள்ளமை பணியாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .