2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அரசாங்கத்துக்கு தனிக் கொள்கை இல்லை’

Gavitha   / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், நடராஜா கிருஷ்ணகுமார்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள், காணியின்றி உள்ள நிலையில், தனியாருக்குச் சொந்தமான காணிகளை, இராணுவம் சுவீகரிக்க முயல்கின்றமை, போரில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில், அரசாங்கத்துக்கு என தனிக் கொள்கை இல்லை என்பதை, தெளிவாகக் காட்டுவதாக, ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தீவகத்தில், நில அபகரிப்புக்கு எதிராக, இன்று (19) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தீவகத்திலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை, இராணுவத்துக்கு சுவீகரித்துக் கொடுப்பதற்காக, நேற்று (18) வருகை தந்த அதிகாரிகள், மக்கள் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றனர் என்றும் மண்கும்பானில் இன்று  சுவீகரிப்பு நடைபெறும் என்று காத்திருந்த போதும், அமைச்சின் அறிவுறுத்தல் பெறும் வரையில், காணிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டமையால், இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கான காணி உரிமையைக் கூட, அரசாங்கம் நசுக்க முனைவதாகவும் முதலில் சரியான கொள்கை ஒன்றை வகுத்து, அரசாங்கம் காணியற்ற 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கும் நிலங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .