2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனவாதம் முற்றாக அணையவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

இந்த நாட்டில், இனவாதம் முற்றாக அணைக்கப்படவில்லையென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில், நேற்று (08) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், சுமந்திரன் நினைக்கின்ற கருத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகச் சொல்லக்கூடாது என்பதுதான் தங்களுடைய எதிர்பார்ப்பெனத் தெரிவித்ததுடன், சுமந்திரனுடைய கருத்து, கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது, அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகதான் அமைய வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டிலே அரசியல் சார்ந்த அல்லது அரசியலோடு இணைந்த இனவெறி சக்திகள் பல்வேறு அமைப்புகளிலும் துறைகளிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சிங்களம் மற்றும் பௌத்த நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதன் விளைவாகதான், அரசாங்கத்தின் ஆதரவோடு விகாரைகள் முளைக்கின்றனவெனவும் குற்றஞ்சாட்டினார்.

​அரசாங்கம் விரும்பினால், இவற்றை எல்லாம் நிறுத்த முடியுமெனவும் ஆனால், அரசாங்கம் விரும்பவில்லை என்பது ஒன்று அரசாங்கத்தால் முடியாமல் இருப்பது வேறொன்றெனவும் அவர் கூறினார்.

இன்னமும் இந்த நாட்டிலே இனவாதம் முற்றாக அணைக்கப்படவில்லையெனக் கூறியதுடன், இதனாலேயே அவ்வப்போது அது கொழுந்துவிட்டு எரியச்செய்கிறதெனவும் அவர் தெரிவித்தார்.

இதனால்தான், தங்களுக்கு இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டுமென தாங்கள் தௌிவாக இருப்பதாக, அவர் மேலும் கூறினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .