2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரணைமடுவுக்கு அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை இராணுவத்தினரால்  நேற்று (02) அகற்றப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு. அவர்களின் வழிபாட்டுக்காகவும் இராணுவத்தினரின் தேவைக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும் விகாரையில் இருந்த சிலையே, இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

குளத்தின் பொறியியளாளரின் அலுவலகம் புனரமைப்பு பணி காரணத்தால், இராணுவ முகாம் அங்கிருந்து வேறு ஓர் இடத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.

இந்நிலையில் தற்போது முன்னெடுக்ப்பட்டு வரும் குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதன் காரணத்தால், விகாரையில் இருந்த புத்தர் சிலையை இராணுவத்திரால்  அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .