2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இவ்வருடத்துக்குள் பூநகரிக்கு குடிநீர் கிடைக்கும்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்துக்கான அபிவிருத்தி வேலைகள் பூர்த்தியடைந்து வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூநகரிப் பிரதேசத்தின் கொல்லக்குறிச்சி, செட்டியகுறிச்சி, ஞானிமடம், மட்டுவில்நாடு கிழக்கு, மட்டுவில் நாடு மேற்கு, பள்ளிக்குடா ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு, அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, பரந்தன் பிரதேசத்தில் இருந்து குழாய் மூலம் வாடியடியில் அமைக்கப்படுகின்ற பிரதான நீர்த் தாங்கிக்கு நீரைக்கொண்டுச் செல்வதற்கான குழாய்கள் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன.

மேலும், வாடியடியில் அமைக்கப்படுகின்ற நீரத்தாங்கியின் கட்டுமானப்பணிகள் 80 சதவீதத்துக்கு மேல் பூர்த்தியடைந்துள்ளன.

இதேவேளை, குழாய் மூலம் கொண்டுசெல்லும் நீரைத் தேக்குவதற்கானத் தொட்டி அமைக்கும் பணிகள் 20 சதவீதத்துக்கு மேல் பூர்த்தியடைந்துள்ளன.

எனவே, இவற்றின் கட்டுமானப்பணிகள், இவ்வருடத்தில் பூர்த்தியாக்கப்பட்டு, நீர் விநியோகம் மேற்கொள்ளமுடியம் என்றும், மாவட்ட அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .