2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உள்ளவாங்காத விவகாரம்; நடவடிக்கை எடுப்பதாக உறுதி

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

வன்னிப் பகுதிப் பாடசாலைகளில், 01.07.2013இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து சேவையாற்றும் ஆசிரியர்கள், மூன்று வருட சேவைக் காலத்துக்குள் உள்ளவாங்காத விவகாரம் குறித்து, கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கும் சேவைக்காலத்துக்குள் உள்ளவாங்கப்படாத ஆசிரியர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, கைதடியிலுள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, வட மாகாணத்தின் வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் 01.07.2013இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து சேவையாற்றும் ஆசிரியர்களின் மூன்று வருட சேவைக்காலம் சேர்க்கப்படாதமை குறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதையடுத்தே, முதலமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார். இதன்போது, முதலமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .