2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எருக்கலம்பிட்டி இறால் பண்ணை தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ள தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இறால் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கிய அரச நிறுவனங்கள், எருக்கலம்பிட்டி பொது அமைப்புகள், பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து, எருக்கலம்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட இறால் பண்ணை தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் 2019ஆண்டுக்கான 2ஆவதும் இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில், இன்று (10) நடைபெற்றது.

இதன்போது, எருக்கலம்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட இறால் பண்ணை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கும் மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதையடுத்தே, இறால் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கிய அரச நிறுவனங்கள், எருக்கலம்பிட்டி பொது அமைப்புகள், பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து, எருக்கலம்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட இறால் பண்ணை தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவதற்கான முடிவெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X