2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒரே இரவில் இந்துக்களின் வணக்கத்தலங்கள் சேதம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் 3 இடங்களில் இந்துக்களின் வணக்கத்தலங்கள் திங்கட்கிழமை (12) இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட லிங்கேஸ்வரர் தேவஸ்தானம் உடைக்கப்பட்டு, கடந்த 30 வருடங்களாக அங்கிருந்த 3 சிலைகள் திருடப்பட்டுள்ளன.

மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, மன்னார்-தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது. குறித்த சிலை பல தடவைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .