2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர், மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று, மன்னார் மறை மாவட்ட ஆயர்   கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ   ஆண்டகையிடம் ஆசி பெற்றனர்.

அத்தோடு, பல்வேறு விடையங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினர்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்தே, நேற்று  (09) மாலை மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று, மறை மாவட்ட ஆயரிடம் ஆசி பெற்றுக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், ஏனைய விடையங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .