2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்லாறில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்துக்கு உட்பட்ட கல்லாறு கிராமத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு கிராமத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 150 வரையான குடும்பங்களுக்கும், அதன் பின்னர் கண்டாவளைப்பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழ்ந்த 100 வரையான குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு 250 க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் குடியேற்;றப்பட்ட போதும், இப்பகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் எவையும் செய்யப்படவில்லை.

இதனால் இங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்கின்றன.

சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்கள் அற்ற வீடுகளாகவே காணப்படுகின்றன.

இவ்வாறு ஆட்களற்ற வீடுகளில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வருவதுடன், இவ்வாறான வீடுகளுக்கு அருகில் வாழ்வோர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே கல்லாறு கிராமத்தின் தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .