2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’கல்வியை பாதுகாத்தால் எமது இனம் பாதுகாக்கப்படும்’

Editorial   / 2018 ஜூன் 30 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தமிழனினம் கல்வியை அழியாமல் பாதுகாக்குமாக இருந்தால், எமது இனம் அழியாமால் பாதுகாக்கப்படும் என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் இன்று (30) நடைபெற்ற 78 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்விலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

“புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட வறுமை கோட்டின் கீழ் உள்ள 78 மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புத்தகம் அவர்களின் கல்வியில் ஒரு மையில் கல்லாக அமையும்.

“பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் முக்கியத்துவம் எடுக்கவேண்டும் கல்வி ஒன்றுதான் தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள ஒன்றாக காணப்படுகின்றது .

“போரின்போது இறுதியில் கையில் உள்ள பொருட்களுடன் தான் நாங்கள் சென்றோம். இன்று நாங்கள் மீண்டெழுந்ததற்கு கல்வி ஒன்றுதான் உதவி செய்தது. அழிக்கமுடியாத ஒரோ ஒரு சொத்தாக கல்விதான் காணப்படுகின்றது.

“சிறுவர்களின் கல்வி தொடர்பில், நாங்கள் தொடர்ந்தும் ஊக்கம் எடுப்போம். அழிக்க முடியாத கல்லி எங்களிடம் இருக்கும் வரை இந்த உலகில் நாங்கள் நிலைத்துக்கொள்வோம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X