2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கள்ளுத்தவறணை உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை உரிய முறையில் சுற்றுமதில்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, மக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக” கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட சீவல் தொழிலாளர்கள், 120 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளடங்கலாக, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ள, கள்ளுத்தவறணைகளை அகற்றுமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இது தொடர்பில் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.துரைசிங்;கம் கருத்து தெரிவிக்கையில்,

“கசிப்பு உற்பத்தி விற்பனைகளால், கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான எவையும் கள்ளுத்தவணைகளில் இடம்பெறுவதில்லை. கிளிநொச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக 30 வரையான கள்ளுத்தவறணைகள் காணப்படுகின்றன. இதன்மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டே அவர்களது வாழ்வாதாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 650 வரையான அங்கத்தவர்களும் 120 க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இரணைமடுவில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையை அகற்றுமாறு அங்குள்ள பலர் குறிப்பிடுகின்றனர். குறித்த தவறணையானது சுற்றுமதில் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு தினமும் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, உரிய நேரத்தில் மூடப்படுகின்றது.

இதில் எந்த விதமான பிரச்சனைகளும் இடம்பெறுவதில்லை. இதனை அகற்றுமாறு கோருவது எந்த விதத்திலும் பொருத்தமற்றது” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .