2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘காணிகளை அளவிட 15 நாட்கள் தேவை’

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட 15  நாட்கள் தேவை”  என, பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார்.

இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக, பூநகரி பிரதேச செயலாளர் அடங்கிய குழு காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்து, மீண்டும் பிரதேச செயலகத்தை இன்று மாலை வந்தடைந்த பூநகரி பிரதேச செயலாளர், ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இரணைதீவு பூர்வீக காணிகளை அடையாளம் காணும் முகமாக, பிரதேச செயலகத்தில் இருந்து பிரதேச செயலாளரோடு நில அளவை திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களோடு, கள விஜயம் இடம்பெற்றிருந்தது. இந்த அளவீட்டு பணிகளுக்காக 2017 ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட  முடிவுக்கு அமைவாக, பூர்வீக நிலங்களை எல்லைப்படுத்துவதற்காகவும் நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இக்குழு சென்றிருந்தது. 

“இதன்போது, அப்பிரதேசத்தில்  பல இடங்களில் உள்ள எல்லைக் கற்களை அடையாளம் காணும் பணியில் எமது குழுவினர் ஈடுபட்டனர். கணிசமான  எல்லைக் கற்கள் முதற்கட்டமாக அடையாளம்  இடப்பட்டுள்ளது.  இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களது கருத்துப்படி, ஏற்கெனவே அளக்கப்பட்ட  நில அளவை வரைபடத்தில்  உள்ள கற்களை இனம் காணுவதற்கு  ஏரத்தாள 15 நாட்கள் வேலை நாட்களுக்கு மேல் செலவிட வேண்டி உள்ளது. 

“ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை, தங்களால் பதிவிட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு, ஒரு செயற்றிட்டத்தை தயாரித்தப் பின்னர் அதன் களப்பணியில் ஈடுபட உள்ள உத்தியோகத்தர்களுடன் அங்கு தங்கி இருந்து தொடர்ச்சியாக அளவீட்டுப் பணிகளை முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“அதன் பின்னர் இந்த அறிக்கை மாவட்ட செயலாளர் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன், ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை தங்களது பதிவேட்டரை தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்றிட்டத்தை தயாரிக்கவும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தேவைப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .