2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

​‘கால்நடைகளை அழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளை வளர்ப்பதற்கு மேச்சல் தரவை பாரிய பிரச்சனையாக காணப்படுகிறது மாவட்டத்தில் சுமார் 15,000 கால்நடைகளுக்கு மேல் இருக்கின்ற போதும் மேச்சல் தரவை இல்லாதது பாரிய பிரச்சனையாக காணப்படுவதாகவும் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட இதுவரை மேச்சல் தரவை இல்லை எனவும் பல தடவைகள் அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் மேச்சல் தரவை இல்லாது போனால் கால்நடைகளுடன் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்ப்படும் எனவும் தமது கால்நடைகளை அழிக்க வேண்டி வரும் எனவும் கால்நடை வளப்போர் தெரிவிக்கின்றனர்

இது குறித்து அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டுப்பகுதியில் மாட்டு மேச்சல் தரவை பிரச்சனை காணப்படுகின்றது எங்கள் பிரச்சனைகள் தொடர்பில் சகல இடங்களிலும் சென்று கதைத்துள்ளோம் ஒன்றும் சரிவரவில்லை.

மேச்சல் தரவை இல்லாமல் இனி ஒன்றும் செய்யமுடியாத நிலை மேச்சல் தரவையினை கேட்டு ஒருதரும் ஒன்றும் தரவில்லை இங்கு இருக்கின்ற காடுகளை தள்ளிவிட்டு வெட்டையாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

காடு இருந்தது இப்போது அதுவும் இல்லாத நிலைக்கு காட்டினை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இனி நாங்கள் வீதியில்தான் மடுகளை மேய்யக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச்தில் மாத்திரம் 8,000 மாடுகள் வரையில் நிக்கின்றன மாவட்டத்தில் 15 ஆயிரம் மாட்டுக்கு மேல் நிக்கின்றன அவற்றை வைத்து பராமரிக்க மேச்சல் தரவை இல்லாத நிலை காணப்படுகின்றது. பிரதேச செயலகத்துக்கு சென்று கதைத்தாலும் அவர்கள் வனவளபாதுகாப்பு பிரிவினரை அழைத்து கதைக்கின்றார்கள். அவர்கள் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் மேச்சல் தரவை இல்லாத நிலையில், கால்நடைகளை நாங்கள் அழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கால்நடை சங்க தலைவர் ஈஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால் நடைகளுக்காகன மேச்சல் தரவை இல்லாத நிலை காணப்படுகின்றது இதனால் கால்நடை வளர்ப்போர்கள் ஆகிய நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். புதுக்குடியிருப்புக்கு அருகில் உள்ள எழுவாய் என்ற இடத்தில் மேச்சல் தரவை அமைத்து தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை அது செய்து தரப்படவில்லை. எங்கள் நிலமையில் மாடுகளை மேய்ப்பதற்கு மேச்சல்தரவை ஒன்று கட்டாய தேவையாக உள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 50 பேர் செந்தமான கால்நடைபண்ணையாளர்கள் காணப்படுகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு மேச்சல் தரவை இல்லாத நிலையில், எங்களுக்கு வயல்செய்கை பண்ணப்படும் காலங்களில் வயலும் செய்யவேண்டும். மேச்சல் தரவை தருவதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை அவை அடையாளப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் மாடுகளை கொண்டு நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்தகட்டம் அதனை மேற்கொள்வோம் எங்களுக்கான மேச்சல் தரவையினை விரைவில் அடையாளப்படுத்தி இடத்தை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .