2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குழாய்கிணற்றால் மக்கள் அவதி

Editorial   / 2018 ஜூலை 07 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் கழிவு வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய்க்கிணற்றால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதான வீதியின் இரணைப்பாலை பகுதியில், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் குழாய்க்கிணறு, உரிய இடம்தெரிவு செய்யப்படாது, உரிய அனுமதிகள் பெறப்பாடாது, கழிவு வாய்க்காலில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் அதிகளவான கழிவு நீரைக்கொண்டு செல்லும் இக்கழிவு வாய்க்காலில் வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையும் காணப்படுகின்றது.

அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, குறித்த வாய்க்கால் ஊடாக நீர் வெளியேற முடியாது அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்திகள் உரிய திட்டமிடல் இன்றி ஏற்பட்டதால் இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொள்வதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .